மொழியாலும் ஒன்று படு

தமிழர்கள் என்றால் தமிழ் மொழி பேசும் அனைவரும் தமிழர்களே. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், பௌத்தன் என யாராக இருந்தாலும் தமிழ் பேசுபவன் தமிழன். இந்த மொழி வந்த பின்னரே மதம் (பைத்தியம்) வந்தது.
நாம் எல்லோரும் ஒரு மொழி பேசுபவர்கள் என்ற அடையாளத்தை உணரும் வரை நமக்குள் பிரிவினையே மேலோங்கிக் காணப்படும்.
ஆடை என்பது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். ஒவ்வொரு நிறுவனங்களின் (Organizations) விதிமுறைகளுக்கு ஏற்ப சீருடைகள் மாறலாம்.
சீருடைகளில் எனக்குப் பல விவாதங்கள் உண்டு. பாடசாலைச் சீருடை, ஆண் பிள்ளைகளின் சீருடை தரம் பத்துக்கு பிறகு மாறும்போது பெண்பிள்ளைகளின் சீருடை மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி இருப்பது ஏன் என்பது போல் பல கேள்விகள் சீருடையில் உள்ளன.
ஆனால், அரசாங்கச் சட்டத்தின்படி ஒருவன் தன் மத அடையாளங்களைச் சீருடைக்கு மேலதிகமாக உட்படுத்திக் கொள்ளலாம் எனும் ஓர் உள்ளடக்கிய (Inclusive) நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்படி இருக்கும்போது, நம் மொழி ரீதியான ஒருமைப்பாட்டை மறந்துவிட்டு, இந்த மதம் எனும் மதம் பிடித்து அதைச் சுற்றி நம் அடையாளத்தை அமைத்துக் கொள்வது நம்மை நாமே மிகவும் குறுக்கிக் கொள்வதாகும்.
மொழி வந்த பின்னரே மதம் வந்தது என்பதை நாம் அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களே என்பதை எல்லோரும் உணரும் வரை மாற்றம் என்பது நமக்குள் வரப்போவதில்லை.
இதற்கு அர்த்தம் நான் மொழி ரீதியான பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறேன் என்பதல்ல; மொழி ரீதியான ஒருமைப்பாட்டை தூண்டுவதே இந்தப் பதிவின் நோக்கம்.
ஒவ்வொரு ஹிந்து சிறுவனுக்கும் ஒரு முஸ்லிம் ஒரு பௌத்த ஒரு கிறிஸ்தவ நண்பன் இருந்துவிட்டால் இங்கு எல்லாமே இலகுவாகிவிடும்.
துவேஷம் என்பது ஒரு சுவற்றில் எறியப்பட்ட பந்து போல நாம் எரிந்து கொண்டிருக்கும் வரை அது வந்து கொண்டே இருக்கும் யாராவது நிறுத்த வேண்டும் முதலில் நாம் நிறுத்துவோம் அது நின்றுவிடும்.
விதைப்பது நம் வேலை முளைப்பது விதையின் வேலை...
Share this article
Generate a story card or copy link to clipboard

Saadh Jawwadh
Exclusivity is necessity; not a choice.
My desire on how the AI race should go?
Exclusivity is necessity; not a choice.
My desire on how the AI race should go?